மேற்காசிய போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் ஆகிய காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 2 வாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 4 முறை உயர்ந்தது.
அதன் படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசு உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.77 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.55-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன் படி இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 108.01 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டீசலுக்கு 23 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ. 99.78 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.




