16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை கடந்த 16 நாட்களாக மாற்றமில்லாமல் உயர்த்தப்பட்ட ஒரே விலையில் தொடர்ந்து விற்பனைச் செய்யப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை,கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி…

பெட்ரோல், டீசல் விலை கடந்த 16 நாட்களாக மாற்றமில்லாமல் உயர்த்தப்பட்ட ஒரே விலையில் தொடர்ந்து விற்பனைச் செய்யப்பட்டுவருகிறது.

டெல்லி, மும்பை,கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தொடர்ந்து இன்று வரை பெட்ரொல் டீசல் விலையில் மாற்றமின்றி நீடிப்பது பொதுமக்களிடம் நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.

கடந்த மாதம் பெட்ரொல் மற்றும் டீசலின் விலை ஒவ்வொரு நாளும் ஒரு விலையென புதிய உச்சத்தை தொட்டு நின்றது. பிப்ரவரி 27-ம் தேதி முதல் தற்போது வரை அதிகபட்சமாக டெல்லியில் பெட்ரோல் விலை 91.17 பைசாவுக்கு விற்கப்படுகிறது. மும்பையில் 97.57 பைசாவுக்கு விறபனையாகிறது. சென்னையில் 93.11 பைசாவுக்கும் மற்றும் கொல்கத்தாவில் 91.35 பைசாவுக்கும் விற்பனைச்சசெய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.