தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு ஒப்புதல் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தன்பாலின ஈர்ப்பாளர் திருமணத்துக்கு ஒப்புதல் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை நெதர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, தெற்கு ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சட்டரீதியாக அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும்…

தன்பாலின ஈர்ப்பாளர் திருமணத்துக்கு ஒப்புதல் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை நெதர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, தெற்கு ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சட்டரீதியாக அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ சட்டம் அனுமதி வழங்குகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சுப்ரியோ சக்ரவர்த்தி – அபய்டாங் மற்றும் பார்த்ஃபிரோஸ் – உதய்ராஜ் ஆகிய இரண்டு தன்பாலின ஈர்ப்பு ஜோடிகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளனர். இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமை மற்றும் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை மீறுவது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தன்பாலின ஈர்ப்பாளர்கள், இரு பாலின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோருக்கும் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள உரிமை வழங்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து நான்கு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.