பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் மனு – 10 நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு!

பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வலியுறுத்தி இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் 10நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட…

பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வலியுறுத்தி இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் 10நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரியும், திருத்தப்பட்ட கட்சி விதிகளை அங்கீகரிக்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருசந்திரா குமார் கவ்ரவ் முன்பு விசாரணை தொடங்கியது

இந்த வழக்கில் பதில் அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தது.

இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார். ஏற்கனவே இவர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க பத்து நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில் அந்த அவகாசத்தை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியது

10 நாட்களில் இபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த மனு தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு முடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.