ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்பட தமிழ்நாடு அரசின் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்பட தமிழ்நாடு அரசின் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க விருது நாமக்கல் பொ.வேல்சாமிக்கும் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கும், தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது எஸ்.வி. ராஜதுரைக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா.மதிவாணனுக்கும் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.