புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ)கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி பொதுத்துறை, தனியார் நிறுவன தொழிலாளர்களிடம் இருந்து பி.எப். பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது, வங்கி ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வங்கிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் இயக்கப்பட வேண்டும் எனவும், சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க போதுமான ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வங்கிகள் சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.