திருவெள்ளறை அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப்
பெருமாள் திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேஷங்களில் 6-வது திவ்ய திருத்தலமாக விளங்கும் அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷபெருமாள் திருக்கோயிலின் தேர்த்திருவிழாவானது மார்ச் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் 8ம் நாள் திருவிழாவான, வெள்ளிக்கிழமை காலையில் அருள்மிகு புண்டரீகாஷப் பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வண்டுலூர் சப்பரத்தில் திருவீதி உலாவும், அதனைதொடா்ந்து இரவு குதிரை வாகன வையாளி விழாவும் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—கா.ரூபி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: