முழு ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி: தமிழ்நாடு அரசு

முழு ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய நாளில் பொதுப்போக்குவரத்து ரத்து…

முழு ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய நாளில் பொதுப்போக்குவரத்து ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முழு ஊரடங்கின்போது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல தற்போது அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து பொதுமக்கள் தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.