முக்கியச் செய்திகள் தமிழகம்

முழு ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி: தமிழ்நாடு அரசு

முழு ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய நாளில் பொதுப்போக்குவரத்து ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முழு ஊரடங்கின்போது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல தற்போது அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து பொதுமக்கள் தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

Saravana

ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த உள்ள அமைச்சர்..

Saravana Kumar

பிலிப்பைன்ஸில், ’ராய்’ தாண்டவம் : பலியானோர் எண்ணிக்கை 169 ஆக உயர்வு

Ezhilarasan