முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலியல் புகார்-சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் கைது

சேலம் பகுதியைச் சேர்ந்த வேதியியல் துறை ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் பதிவாளர் மற்றும் வேதியியல் துறை பேராசிரியராக உள்ள கோபி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.

மாணவியின் உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியர் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக உள்ளவர் பேராசிரியர் கோபி.

இவர் பேராசிரியராகப் பணியாற்றி வரும் வேதியியல் துறையில், சேலம் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார் .

இந்த நிலையில் நேற்று மாலை பேராசிரியர் கோபி, ஆராய்ச்சி மேற்படிப்பு பயிலும்
மாணவியை, தான் தங்கி இருக்கும் விடுதிக்கு வரச் சொல்லி இருக்கிறார். அங்கு பாட
சம்மந்தமாக விளக்கம் அளிப்பதாகவும் கூறியுள்ளார் .

இதை நம்பி மாணவி மற்றும் அவரது உறவினர்கள் விடுதிக்கு சென்றனர். உறவினர்களை அறைக்கு வெளியில் நிற்க சொல்லி விட்டு மாணவி மட்டும் உள்ளே சென்றுள்ளார்.

அங்கு மாணவியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பேராசிரியர் கோபி திடீரென
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது‌. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அழுது கொண்டே வெளியில் வந்து தனது உறவினரிடம்
கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கோபியை தாக்கியுள்ளனர். ‌‌ இதில் காயமடைந்த பதிவாளர் கோபி சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

மேலும் பதிவாளர் கோபியும், அவரது நண்பரும் மாணவியின் உறவினர்களைத்
தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர் கோபி மீது புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி மீது பெண்கள்
வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு ,
கோபியை கைது செய்தனர். மாணவியின் உறவினர்களிடமும் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை – உ.பி. அரசு திட்டம்

EZHILARASAN D

சொத்து வரி உயர்வு: வலுக்கும் கண்டனங்கள்

Janani

அரசு திருவிழாக்களில் பாகுபாடு காட்டக்கூடாது – ஆதிதிராவிடர் மாநில ஆணையம்

Dinesh A