பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி தலைமை நிர்வாகிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர் கூட்டமைப்பு சங்கங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு முன்னணி வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வங்கிகளின் நிர்வாக திறனை உயர்த்துவது, நிலுவையில் உள்ள கடன் தொகைகளை மீட்டெடுப்பது, நகை கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், நகை கடன்கள் மீதான வட்டி விகிதம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








