ராமநாதபுரம் அருகே மூன்று மதத்தினர் கலந்து கொண்ட பெரியபட்டினம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ்
தர்ஹா 122 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பெரியபட்டினம் பள்ளி வாசலில் இருந்து வான வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடி ஊர்வலம் தர்ஹாவை மும்முறை வலம் வந்தது.

விழாவில், பெரியபட்டணம், ரெகுநாதபுரம் முத்துப்பேட்டை, திருப்புல்லாணி வழுதூர். வாலாந்தரவை ராமநாதபுரம், கீழக்கரை, காரான் கும்பரம், தாமரைக் குளம் ரெட்டையூரணி, புதுமடம் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் பங்கேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: