பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது..!

‘கேஜிஎஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் வெளியானது. கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.…

‘கேஜிஎஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் வெளியானது.

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாக நடிக்கும் சலாம் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படம்  தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகவுள்ளது. வரும் செப்டம்பர் 28-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது.

இப்படம் ’கேஜிஎஃப்’ யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியானது.

https://www.youtube.com/watch?v=-AdQy2ERr1E&t=3s

எதற்காக அதிகாலையில் டீசரை வெளியிடுகிறார்கள் என கேள்வி எழுப்பிய நிலையில், கேஜிஎஃப் 2 கிளைமேக்ஸ் காட்சியில் ராக்கி கப்பலைச் செலுத்திக்கொண்டிருக்கும்போது அவருக்கு அருகிலிருக்கும் கடிகாரத்தில் அதிகாலை 5 மணி என குறிப்பிடும்படி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், சலாருக்கும் கேஜிஎப்க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.