தாயார் மறைவு: ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார் ஹெச்.ராஜா

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமான நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரில் ஆறுதல் கூறினார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார்…

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமான நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரில் ஆறுதல் கூறினார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார்
பழனியம்மாள் (வயது 94) வயது மூப்பின் காரணமாக காலமானார். இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லம் சென்றார்.   அங்கு வைக்கப்பட்டிருந்த பழனியம்மாள் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

—-ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.