லண்டன் பெண்ணை இந்திய முறைப்படி திருமணம் செய்த இளைஞர்!

லண்டனைச் சேர்ந்த பெண்ணுக்கும், விருதுநகர் இளைஞருக்கும் இந்திய முறைப்படி  திருமணம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் சங்கர் விஜயகுமார். இவரது மகன் கார்த்திக் பொறியியல் படித்துவிட்டு லண்டனில்…

லண்டனைச் சேர்ந்த பெண்ணுக்கும், விருதுநகர் இளைஞருக்கும் இந்திய முறைப்படி  திருமணம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் சங்கர் விஜயகுமார். இவரது மகன் கார்த்திக் பொறியியல் படித்துவிட்டு லண்டனில் வேலை செய்து வருகிறார். இவர் லண்டனைச் சார்ந்த கேட்டியா ஒலிவேரா என்ற மீனாட்சியை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: உலக வங்கித் தலைவா் பதவி: அஜய் பங்காவுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா!

இந்நிலையில், இவர்களின் திருமணத்திற்கு கார்த்திக் குடும்பத்தினர் அனுமதி அளித்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள வலுக்கலொட்டி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

லண்டன் மணப்பெண்ணுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அவருடன்
பணிபுரியும் நைஜீரியாவை சார்ந்த தோழி ஒருவர் பெண் வீட்டார் சார்பாக அனைத்து
சடங்குகளையும் செய்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.