பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். இவ்வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென்ற தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் வேண்டுகோளை ஏற்று கடந்த மே மாதம் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் பின்னர் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரறிவாளன் சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதை கருத்தில் கொண்டு அவரது பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுள்ள தமிழ்நாடு அரசு பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.