‘மக்கள் திமுக அரசுக்கு முடிவுரையை விரைவில் எழுதுவார்கள்’ – பாஜக மாநில தலைவர்

திமுக அரசு தங்களது ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவோர்களின் குரல்வளையை நசுக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

திமுக அரசு தங்களது ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவோர்களின் குரல்வளையை நசுக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘திமுக அரசு தங்களது ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவோர்களின் குரல்வளையை நசுக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ள அவர், இந்த அரசு மக்களை மறந்து வெகு நாட்கள் ஆகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற வீடியோ ஒன்றை பதிவிடுள்ள அவர், வாராவாரம் இப்படிப்பட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடப்பது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை என விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்தது’

திமுக நிர்வாகியிடம் இழந்த 4000 சதுரடி நிலத்தை மீட்கப் போராடும் இந்த குடும்பம் எடுத்த முடிவு தீக்குளிப்பு, என குறிப்பிட்டுள்ள அவர், விளம்பரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இந்த திமுக அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1531839336886714369?t=mxbJq3J-nlJa141epnmTRQ&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.