சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2,373-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மே-1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.102.50 உயர்த்தியது. இந்த விலை உயர்வு, பேக்கரி கடை, தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத்தொடர்ந்து, வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தது. இதனால், சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது இது மிகப்பெரிய ஷாக்காக இருந்தது. அதனைத்தொடர்ந்து, சென்னையில் வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் உயர்ந்தது.
அண்மைச் செய்தி: ‘மதுரை – தேனி சிறப்பு ரயில்சேவை நேரம் மாற்றம்; மதுரை கோட்ட ரயில்வே’
அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கும், வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.2499-லிருந்து ரூ.8 அதிகரித்து ரூ.2507 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, அண்மையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2,373-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோகசிலிண்டர் விலை மாற்றமில்லாமல் ரூ.1,018.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வணிக உபயோகத்திற்கான கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.