நீட் தேர்வு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுகவை எதிர்காலத்தில் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனத்து கட்சி கூடம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நீட் விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜகவை தொடர்ந்து அதிமுகவும் பங்கேற்காது என அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இயக்கமாகவே நடைபெற்று வருவதாக கூறினார்.
மாநிலம் முழுவதும் 4 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், மாநிலம் முழுவதும் இதுவரை 9 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நீட் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவை எதிர்காலத்தில் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறினார்.
மேலும், கூட்டத்தில் பங்கேற்காத போதும், நீட் தேர்வில் இருந்து விலக்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும், கடந்த முறை நடைபெற்ற
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பரிந்துரைத்த கருத்துகளை தமிழ்நாடு அரசு முறைப்படி செயல்படுத்தவில்லை என்பதால் இன்றைய கூட்டத்தை புறக்கணித்ததாக அதிமுக தரப்பில்
தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







