அரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பயணம் செய்யும் மக்கள்!

உதகையில் அரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பொதுமக்கள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.   உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையிலிருந்து கூக்கல்தொரை…

உதகையில் அரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பொதுமக்கள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  

உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையிலிருந்து கூக்கல்தொரை கிராமத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்தினுள் மழைநீர் ஒழுகியதால் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும்  கல்லூரி மாணவர்கள் சிலர் குடைகளை பிடித்தப்படி பேருந்தில் பயணம் செய்தனர்.

இதையும் படிக்கவும் : திருவாரூர் ஆழித்தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்காத காரணத்தினால் பேருந்துகள் மோசமான நிலையில் காணப்படுகிறது. பேருந்தின் மேற்புற கூரையின் மேல் ஆங்காங்கே காணப்படும் ஓட்டையின் வழியாக மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பேருந்திற்குள் குடை பிடித்தபடி பயணம் செய்ய வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.

தற்போது உதகையில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளை முறையாக சீரமைத்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.