திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்த பயணியிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.…

திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்த பயணியிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு
விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கவும் : அரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பயணம் செய்யும் மக்கள்!

இன்று காலை ஹைதராபாத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது இந்த விமானத்தில் ஹைதராபாத்திற்கு பயணம் செய்ய இருந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ராஜம் (வயது 23), பட்டதாரியான இவர் ஹைதராபாத்திற்கு பணி புரிவதற்காக விமானத்தில் செல்ல இருந்தார்.இந்நிலையில் இவரது உடமையில் வெடிக்காத துப்பாக்கி தோட்டா இருப்பதை கண்டறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை பறிமுதல் செய்து சந்தோஷ் ராஜத்திடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த துப்பாக்கி தோட்டா எங்கிருந்து தனது உடமைக்கு வந்தது என்று தெரியவில்லை என சந்தோஷ் ராஜம் தெரிவித்ததாக தெரிய வருகிறது.

இதனைத் தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்த ஏர்போர்ட் போலீசார் அவரை
ஜாமினில் விடுதலை செய்தனர். இதனால் விமான நிலைய பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.