அமெரிக்காவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட 2 இந்தியர்கள் யார்?

அமெரிக்காவில், இந்தியாவைச் சேர்ந்த மீரா ஜோஷி மற்றும் ராதிகா ஃபாக்ஸ் ஆகிய இரண்டு பெண்களுக்கு முக்கிய பதவி உயர்வுகளை அதிபர் ஜோ பைடன் வழங்கியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க…

அமெரிக்காவில், இந்தியாவைச் சேர்ந்த மீரா ஜோஷி மற்றும் ராதிகா ஃபாக்ஸ் ஆகிய இரண்டு பெண்களுக்கு முக்கிய பதவி உயர்வுகளை அதிபர் ஜோ பைடன் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் முதலில் இருந்தே அங்கம் வகித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த மீரா ஜோஷி மற்றும் ராதிகா ஃபாக்ஸ் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரா ஜோஷியை போக்குவரத்துறையின் வாகன பாதுகாப்பு பிரிவுக்கு நிர்வாக இயக்குநராகவும் மற்றும் ராதிகாஃபாக்ஸை நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் துணை நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் வழக்கறிஞரான மீரா ஜோஷி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டப்படிப்பை முடித்த இவர், நியூயார்க் மாகாணத்தில் காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படிப்பை முடித்த ராதிகா, அந்நாட்டு நீர்வள மேலாண்மை துறையில் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.