முக்கியச் செய்திகள் உலகம் Instagram News

பனிக்கட்டியாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!!!

அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பனிக்கட்டியாக உறைந்திருக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் இந்த வருடம் குளிர்க்காலத்தையொட்டி ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் பனிமூட்டம், பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும் மிதமான தட்பவெட்ப நிலை நிலவும் தென்இந்தியாவில் இந்த வருடம் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரதேசமான ஊட்டி குட்டி காஷ்மீர் போன்று காட்சியளித்தது. ஊட்டியில் பனிப்பொழிவு ஏற்பட்டது. வெயில் சுட்டெரிக்கும் சென்னையிலோ ஊட்டி மாதிரியான காலநிலை இருந்தது.

இந்தியாவில் இந்த நிலை என்றால், பனிமழை பெய்யும் நாடுகளோ குளிரில் உறைந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சிலநாட்களாக பனிப்புயல் வீசுகிறது. இதனால், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு சென்றுள்ள நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது.

விமானம், ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக பலர் வாகனங்களிலேயே சிக்கி உயிரிழந்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்கள் தற்போது சமக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கன்னியாகுமரி: ஆசிட் கலந்த குளிர்பானம் அருந்திய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

G SaravanaKumar

2.35 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

G SaravanaKumar

தாயின் உடலை ட்ரம்மில் வைத்து சிமெண்ட் பூசி மூடிய மகன்

EZHILARASAN D