முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் மக்கள் திருப்தியடைந்துள்ளனர் – முரசொலியில் அமைச்சர் கட்டுரை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் மக்களின் மனநிலை திருப்தியடைந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக நாளேடான முரசொலியில் கட்டுரை எழுதியுள்ளார்.

 

திமுக நாளேடான முரசொலியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில், ஊர் தூய்மையாக சிறந்த மருத்துவமும், உள்ளம் தூய்மையாக சிறந்த கல்வியுமே வலிமையான ஆயுதங்கள் என்பதை வலியுறுத்தி திட்டங்களை தீட்டி வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

தனது இலக்கை வெளிப்படையாக சொல்லி அதை நோக்கி வெற்றிகரமாக செல்லும் ஒரு தலைவரை தமிழ்நாட்டு மக்கள் இதற்கு முன்னர் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு தலைவர் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளார். ஒரு சிறந்த ஆசிரியர் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ளார். எங்கள் தலைவர் மற்றும் எங்கள் முதல்வர் என்று அழைப்பதை விட மக்கள் பணியாளரே என்று அழைப்பதுதான் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும்.

தங்களின் செயல்களால் மக்களின் மனங்களில் விடியல் பிறந்துள்ளது. இந்திய ஒன்றியத்திற்கு வழிகாட்டும் திட்டங்களை செயல்படுத்தும் காரணத்தால் ஒட்டு மொத்த மக்களும் தங்களின் பின்னால் அணிவகுக்கிறார்கள். பசியால் துடித்துக்கொண்டிருக்கும் ஒருவன் உணவு உட்கொண்ட பின்னர் திருப்தி (Satiety) மனநிலை ஏற்படும்.

 

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவர்களின் மனநிலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையும் திருப்தியடைந்துள்ளது. தமிழ்நாட்டின் வருங்காலம் நிச்சயம் வளமானதாகத்தான் இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். ஏனெனில் அன்னமிட்டது எங்களின் அரிமா அல்லவா என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

B.E., B.Tech. கலந்தாய்வில் மாணவர்களின் சேர்க்கை விவரத்தை பதிவிட தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவு

EZHILARASAN D

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை – ஒன்றிய அரசு முடிவு ஏற்புடையதல்ல; மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar

மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!

Arivazhagan Chinnasamy