இரண்டு குதிரைகள் மீது மக்கள் மாறி மாறி சவாரி செய்கிறார்கள் – விஜயபிரபாகரன்

அதிமுக, திமுக என்ற இரண்டு குதிரைகள் மீது மக்கள் மாறி மாறி சவாரி செய்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜய் காந்த் மகன் விஜய பிரபாகரன் திருமண நிகழ்சியில் கலந்து கொண்டு பேசினார். நெல்லை…

அதிமுக, திமுக என்ற இரண்டு குதிரைகள் மீது மக்கள் மாறி மாறி சவாரி செய்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜய் காந்த் மகன் விஜய பிரபாகரன் திருமண நிகழ்சியில் கலந்து கொண்டு பேசினார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தேமுதிக பிரமுகரின் திருமணத்திற்கு இன்று வருகை தந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு பேசிய அவர் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அரசியல் நடப்பது தேமுதிகவை சுற்றி தான், தேமுதிகவின் உழைப்பு மற்ற கட்சிகளுக்கு வெற்றியாகவும், சீட் ஆகவும் மாறும், ஆனால் தேமுதிக மட்டும் வெற்றி பெற கூடாது. இது தான் மற்ற கட்சிகளின் சூழ்ச்சியாக இருக்கிறது என கூறினார்.

மேலும், தேமுதிக தோல்வி அடைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளாக MLA, MP இல்லை. ஆனால் நாங்கள் யாருக்கும் அடிமையாக இல்லை என பேசிய அவர் குடும்ப ஆட்சி இருக்க கூடாது என்ற சொல்லுக்கு குடும்பம் இல்லாத அதிமுக இன்றைக்கு எந்த நிலமையில் இருக்கிறது என விமர்சனம் தெரிவித்தார். திமுகவில், ஸ்டாலின்,உதயநிதி எல்லோரும் கட்சியை வழி நடத்தி செல்கிறார்கள். அதே போன்று தான் தேமுதிகவை, எங்கள் அம்மா பிரேமலதா எங்கள் மாமா சுதீஸ் ஆகியோர் கட்சியை வழி நடத்தி செல்கிறார்கள். நாங்கள் மக்களுக்கு உழைக்வே வந்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

திருநெல்வேலிக்கு முதல் முறையாக கட்சி பணிக்கு வந்திருக்கிறேன். வந்த உடனே முதலில் எனக்கு கொடுத்தது அல்வா தான். நெல்லைக்கு அல்வா பேமஸ் இனி தேமுதிகவும் வார்டுக்கு வார்டு பேமஸ் தான். இன்று பொருளாதாரத்தில் தேமுதிக சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதை எல்லாம் சரி செய்ய முடியும் எனவும் இன்றைக்கும் தேமுதிக எந்த பக்கம் நிற்கிறதோ அந்த கட்சி தான் வெற்றி பெறும் எனவும் கூறினார்.

பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக கூறி விட்டு தற்போது அவர்களும் அதையே செய்கிறார்கள் என சுட்டி காட்டிய விஜய பிரபாகரன் மக்களாகிய நீங்கள் தான் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் திமுக அதிமுக என இரண்டு குதிரைகளிலும் மாறி மாறி நீங்கள் சவாரி செய்தீர்கள் என்றால் குதிரைகள் ஓடிக் கொண்டுதான் இருக்கும் ஆனால் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல மாட்டீர்கள். மாற்று சக்தியை மக்களாகிய நீங்கள் தேர்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.