தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் வந்தன. மேலும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர். பலர் விடுமுறையை இன்பமாக களிப்பதற்காக சுற்றுலாவும் சென்றிருப்பார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளையும் அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பூஜை விடுமுறையையொட்டி சுமார் 3 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதையடுத்து தற்போது தொடர்விடுமுறை மற்றும் காலண்டு தேர்வு விடுமுறையும் முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து தற்போது மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
பரனூர் சுங்கசாடிவகளில் வார இறுதியில் உள்ள விடுமுறை நாட்கள் முடிந்து சொந்த ஊர்களிலிருந்து திரும்பும் மக்களால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது என்பது வாகன ஓட்டிகளின் கவலையாக உள்ளது.