வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி, பான்
கார்டு, ஆதார் கார்டு, சேகரித்து, லட்சக்கணத்தில் பணம் ஏமாற்றிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாடி , சத்யா நகர், மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. இவர்
டெலிகிராம் ஆப் வாயிலாக வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை கண்டு
சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர்கள், வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை
கூறி, அவரது பான் கார்டு, ஆதார் கார்டு, ஆகியவற்றை சேகரித்து, குறிப்பிட்ட
வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தும்படி கூறியுள்ளனர். அதன்படி அவரை ஏமாற்றி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். அதன் பின் அந்த டெலிகிராம் முகவரி முற்றிலும் செயலிழந்து விட்டது கண்டு கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், டெலிகிராம் ஆப்
வாயிலாக, பகுதிநேர வேலை தேடுபவர்களை குறி வைத்து, ஆசை வார்த்தை கூடி
மோசடியில் ஈடுபட்டது, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்த சொல்லி ஏமாற்றியது, சென்னை தியாகராய நகர், உஸ்மான் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் வங்கிக் கணக்கென கண்டுபிடித்தனர்.
அவரை இணையதள குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்த போது, இணையதளம் வாயிலாக மிகப் பெரிய ஆன்லைன் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இணையதள குற்றவாளிகளான சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த விவேகானந்தன், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ஹலிக்குள் ஜமால், சென்னை நங்கநல்லூர், வி வி நகரைச் சேர்ந்த அஷ்கர் ஷெரிப், ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில், மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மேலும் இந்த மோசடியில் தங்களுக்கு கமிஷன் தொகை மட்டுமே கிடைக்கும் என்றும்,
வேலை இல்லாதவர்களிடம் ஆன்லைன் வாயிலாக வசூலிக்கும் பணம், அவர்களின் பான்
கார்டு மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி புதிய வங்கி கணக்கு ஒன்று துவக்கப்படும் என்றும், அந்த வங்கி கணக்குகளிருந்து , சீனா கேம்ப்லிங் ஆப் மற்றும் இதர ஆன்லைன் மோசடி குற்றங்கள் செய்யும் உரிமையாளர்கள் வாயிலாக யூ எஸ். வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றம் செய்யப்படும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மேற்கண்ட இணையதள குற்றவாளிகளை கண்டுபிடித்ததன் வாயிலாக, சூதாட்ட ஆப் மோசடி பேர்வழிகள் சூழ்ச்சி செயல் தடுக்கப்பட்டுள்ளது என காவல் துறையிணர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகள்
மடிக்கணினி, 5 செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் மூவரையும் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.







