சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து

தீபாவளி பண்டிகை விடுமுறையை கொண்டாட மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் புறவழிசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக…

தீபாவளி பண்டிகை விடுமுறையை கொண்டாட மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் புறவழிசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தளர்வுகள் எதுவும் இல்லாமல் மீண்டும் பழைய நிலைமையில் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாட உள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தி.நகர், பழைய வண்ணாரப்பேட்டை, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு நகரின் விற்பனை நிலையங்கள் போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாடைகள் வாங்க கடைதெருவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பண்டிகையையொட்டி வார இறுதிநாட்களும் சேர்ந்து வருவதால் சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தவிர, மக்கள் தங்களது சொந்த வாகனங்களான கார் மற்றும் பைக்கிலும் பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் இன்று மாலை 3 மணி முதல் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.