வித்தியாசமான கதைகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டனர் -நடிகர் சிம்பு

இப்போது வித்தியாசமான கதைகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சிம்பு பேசினார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான…

இப்போது வித்தியாசமான கதைகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சிம்பு பேசினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் – நடிகர் சிம்பு கூட்டணியில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் என்பதால் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது.

சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் ராயபேட்டை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன், சரத்குமார், விக்ரம் பிரபு, கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பார் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பேசிய நடிகர் சிலம்பரசன், ‘இந்த படத்தை வெளியிட உதவிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. என்னுடைய குழு அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். உங்களுடன் வேலை செய்தது நன்றி. மல்லி பூ பாடல் கேட்டதும் ஏ ஆர் ரஹ்மான் வெற்றி பெறும் என்றார்.

என்னுடைய மற்றொரு தயாரிப்பு நிறுவனம் என்றால் அதை வேல்ஸ் என்று தான் சொல்வேன். இந்த மாதிரி படம் மக்களுக்குப் புரிய என்று சொல்வார்கள் சிலர் பேசி கேட்டுள்ளேன். இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று தான் சொல்வேன். கனவை நனவாக்க கூடிய நேரம் இது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்து விட்டனர் என பேசினார்.

மேலும், வெந்து தணிந்தது காடு படம் பண்ணும் போது சிறிது பயம் இருந்தது. இப்போது வித்தியமான கதைகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் பண்ணும் போது அப்டேட்ஸ் வேண்டும் என ரசிகர்கள் கேட்கிறார்கள். தினமும் ஏதாவது அப்டேட்ஸ் கேட்கும் போது தவறான முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்காகத் தான் அனைவரும் கடினமாக வேலை செய்கின்றனர்.

என் படம் மட்டும் அல்ல எல்லோருடைய படத்துக்கும் இதை சொல்லி கொள்கிறேன். அதனால் அவர்களுக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள். இதை எனது பத்து தல இயக்குநர் சொல்ல சொன்னார் அதனால் சொல்லி விட்டேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் எனவும் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.