சிம்புவின் நடிப்புக்காக இந்த படத்தில் ரெட் ஜெயன்ட் இணைந்தது என வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் – நடிகர் சிம்பு கூட்டணியில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் என்பதால் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது.
சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் ராயபேட்டை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன், சரத்குமார், விக்ரம் பிரபு, கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பார் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது பேசிய நடிகர் சரத்குமார், ‘பல பேர் பல விதமான விமர்சனங்கள் சொன்னாலும் மும்பைக்குப் போனால் பிழைத்து கொள்ளலாம் என இந்த படத்தில் சொல்லி உள்ளார். ரசிகர்கள் சத்தம் போட்டு கொண்டு இருந்ததால் மேடையில் கோவப்பட்ட சரத்குமார். சிறிது நேரம் அமைதியாக இருந்தால் தான் நான் பேசுவது கேட்கும். நல்ல கருத்துகள் சென்றடையும் என்றார்.
அண்மையில் ரசித்து பார்த்த படம் வெந்து தணிந்தது காடு. அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என்ன வேண்டும் என்பதைச் சரியாகக் கொண்டு வருபவர் கவுதம் மேனன். நான் பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தின் என்னை வித்தியாசமாக காட்டியவர் கவுதம் மேனன் தான்.
தன்னை சுயமாக உருவாக்கி கொண்டனர் கணேஷ் தான். திரைக்கு சென்று படங்களை பாருங்கள் உங்களை போன்ற ரசிகர்களால் தான் படங்கள் வெற்றி பெரும் என அவர் பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘என்னோட படத்தின் புரொமோஷன் வேலை காரணமாக தான் இங்கு தாமதமாக வந்தேன் மன்னிக்கவும். வெந்து தணிந்தது காடு படத்தின் குழு அத்தனை பேருக்கும் நன்றி. படம் முதலில் எனக்கு தான் போட்டு காட்டினார்கள். ஐசரி கணேஷ் மற்றும் கவுதம் மேனன் தேர்வு எழுதிய மாணவர்கள் போல இருந்தனர் என்றார்.
மேலும், விண்ணை தாண்டி வருவாயா பெரிய வெற்றி பெற்றது. அது போலவே இந்த படமும் வெற்றி பெறும் என்றேன். சிம்புவின் நடிப்புக்காக இந்த படத்தில் ரெட் ஜெயன்ட் இணைந்தது. சிம்பு சொன்ன ஒரே காரணத்திற்காக தான் இந்த படத்தில் இணைந்தேன். விரைவில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் அதற்காக காத்திருக்கிறோம் என அவர் பேசினார்.









