மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால், மதுபாட்டில்களை வாங்க மக்கள் சாரை சாரையாக குவிந்தனர்.
தழிழ்நாடு முழுவதும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக மதுபான கடைகள் தேர்தல், நடக்கும் பகுதிகளில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தேர்தல் நாளான இன்று வாக்குபதிவு நடைபெற்ற அனைத்து பகுதிகளிலும் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது.
மதுரையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகள் இயங்கவில்லை. ஆனால், திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் செல்லும் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடை வழக்கம் போல் செயல்பட்டதால், அப்பகுதியில், மதுபான பாட்டில்களை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.
அண்மைச் செய்தி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு
இதனால், திருப்பரங்குன்றம் வழியாக நிலையூர் செல்லும் சாலை முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டத்தை கலைக்க ஆஸ்டின்பட்டி போலீசார் ஈடுபட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








