முக்கியச் செய்திகள் Local body Election

நிறைவு பெற்றது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 6 மணியோடு நிறைவுபெற்றது.

21 மாநகராட்சிகள் ,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்களுக்கு, மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளுக்கும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளுக்கும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகலுக்குமான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, இன்றைய தினத்தில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்து 158 வாக்குச்சாவடிகளும், நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 2½ கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும், காவல் துறையினர் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மாலை 5 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 41.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி 22ம் தேதி,  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல்கொடுத்தால்…. துரைமுருகன்

Halley Karthik

“கூலாக இல்லாவிட்டால் அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது” – ஆளுநர்

Halley Karthik

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

G SaravanaKumar