மதுரையில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

மதுரை கரிமேடு சந்தை பகுதியில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிந்தது கொரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கரிமேடு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கடைகளுடன் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது.…

மதுரை கரிமேடு சந்தை பகுதியில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிந்தது கொரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கரிமேடு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கடைகளுடன் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. கொரானா தடுப்பு நடவடிக்கையாக சில மாதங்கள் மீன் மார்க்கெட் மூடப்பட்டுள்ளது

மீன் மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் சாலை ஓரங்களில் மீன்கள் விற்பனை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர்

சமூக இடைவெளியின்றியும், முக கவசம் அணியாமலும் மக்கள் வந்து சென்றனர். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மீன்கள் விற்பனை. மார்க்கெட்டில் மூடப்பட்ட கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.