கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் காலிறுதி சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஈகுவாடர் அணியும், அர்ஜென்டினா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் இறுதி கட்டத்தில், அர்ஜென்டினாவின் ரோட்ரிகோ டி பால் முதல் கோல் அடித்தார்.
இதன்மூலம், முதல் பாதியில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இரண்டாம் பாதியில் 84வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லாடாரோ மார்ட்டினசும், 93வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸியும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். ஈகுவாடர் அணி தரப்பில் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம், 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.







