திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இல்லாததால் தவித்த மக்கள்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல், பல மணி நேரம்  பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவதி அடைந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்…

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல், பல மணி நேரம்  பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவதி அடைந்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய
சுவாமி கோயில் தமிழகத்தில் சிறந்த ஆன்மீக சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.
திருவிழா கலைஞர் தவிர்த்து விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்
விடுமுறையால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலில்
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோயில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் நகர் பகுதி முவதும் திருவிழா நாட்கள் போல் காட்சியளித்தது.

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்தும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பேருந்து நிலையத்தில் குழந்தைகளுடன் காத்திருந்தனர். இது மாதிரியான விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கி பொதுமக்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.