கட்டுமான ஒப்பந்த பணியில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை – அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

இந்தியன் ஆயில் நிறுவன கட்டுமான ஒப்பந்த பணிகளில் உள்ளூர் மக்களுக்கு உரிய பணிகளை வழங்க கோரி வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில்,…

இந்தியன் ஆயில் நிறுவன கட்டுமான ஒப்பந்த பணிகளில் உள்ளூர் மக்களுக்கு உரிய பணிகளை வழங்க கோரி வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் ஐ.ஓசி.எல் ஆயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் வல்லூர் கொண்டக்கரை கிராம மக்கள் இடையே சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடை பெற்றது.

இதில் கட்டுமான ஒப்பந்த பணிகளில் தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கட்டுமான பணி நடைபெறுதல் காரணமாக கொண்டக்கரை, சுப்பாரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மக்களுக்கு அதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

—-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.