ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 4வது நாளாக தொடரும் சோதனை; சென்னையில் 10 இடங்களில் நிறைவு

சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 21 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், 10 இடங்களில் சோதனையானது நிறைவு பெற்றுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012ம் ஆண்டு முதல் சென்னையை…

சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 21 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், 10 இடங்களில் சோதனையானது நிறைவு பெற்றுள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012ம் ஆண்டு முதல் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.  கொடுங்கையூர், மணலி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை, கோவை, திருச்சி, மைசூர், ஹைதராபாத், கர்நாடாக உள்ளிட்ட இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் தொடங்கியது முதல் ஆண்டு ஒன்றுக்கு 56 கோடி ரூபாய் வருமான ஈட்டி வந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது அதன் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது. மேலும், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் இந்நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 21 இடங்களில் சோதனை நடைபெற்றது. தற்போது சென்னையில் கடந்த 4 நாட்களாக ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தற்போது 10 இடங்களில் நிறைவு பெற்றுள்ளது.

மேலும், கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.  சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.