திமுக ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாங்கள் பொதுச் செயலாளர் தேர்வு அறிவிப்பு வெளியிடவில்லை. ஊடகங்களில் தான் தவறான செய்திகளை வெளியிடுகின்றனர். திமுக அரசு எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி உட்பட அனைத்துத் திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு அதனை தான் தற்போது திறந்து வைத்து வருகின்றனர். திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் எதிர்கொண்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி என்ன போராடி சாதித்தார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். என்ன ஆனது மக்களை ஏமாற்றுகின்றனர். அதிமுக எம்பிகள் கடந்த முறை மக்கள் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்கினோம் என்றார் எடப்பாடி பழனிசாமி.








