‘பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் திடீர் மரணம்

“பென்சில்” திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் திடீரென காலமானார். அவருக்கு வயது 46. அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா, விடிவி கணேஷ், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்த பென்சில் படத்தை…

“பென்சில்” திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் திடீரென காலமானார். அவருக்கு வயது 46. அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா, விடிவி கணேஷ், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்த பென்சில் படத்தை மணி நாகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது.

இன்று காலை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை மணி நாகராஜ் இயக்கி இருந்தார். இதில் நீயா நானா கோபிநாத், அனிகா, வனிதா விஜயகுமார், சீதா, கிரிஷிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அவர் திடீரென மரணமடைந்தது திரையுலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகப் பிரமுகர்கள் பலர் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணி நாகராஜ். ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் மணி நாகராஜ் தான்.

ஜி.வி.பிரகாஷ் இரங்கல்

என் அன்பு நண்பர் இயக்குனர் மணி நாகராஜ் இனி இல்லை என்று நம்புவது கடினமாக உள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார்.

பென்சில் பட இயக்குநர் மணி நாகராஜ் திருச்சியை சேந்தவர், அவருக்கு 46 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.