பேனா சின்னம்; எடப்பாடி பழனிசாமிக்கு திமுக நாளேடு பதில்

பேனா சின்னம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுக நாளேடான முரசொலியில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்டால்,…

பேனா சின்னம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுக நாளேடான முரசொலியில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்டால், நிதியில்லை என முதலமைச்சர் பதிலளிக்கிறார். நிதியில்லாத இந்த நேரத்தில் கருணாநிதியின் பேனாவிற்கு 80 கோடி ரூபாயில் சிலை வைக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், எழுதாத பேனாவிற்கு 80 கோடியில் சிலை எதற்கு என்று மக்கள் கேட்கிறார்கள். ஒரு கோடியில் வைத்தால் போதாதா? இந்த 80 கோடியைக் கொண்டு ஆறரை கோடி தமிழ் மக்களுக்கும் பேனா வாங்கிக் கொடுக்கலாமே? என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு திமுக நாளேடான முரசொலி இன்று பதிலளித்துள்ளது. அதில், “கலைஞரின் பேனா எழுதி எழுதி இமயம் போல் குவித்த பேனா. இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றை, அந்தப் பேனா பெற்றெடுத்த எழுத்தைத் தவிர்த்துவிட்டு வரைந்திட இயலாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடையாளமாகத்தான் பேனாவின் சிலையை கலைஞரின் நினைவிடத்தையொட்டி நிறுவிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பேனாவின் மறு பெயரே கலைஞர் என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.