முக்கியச் செய்திகள் தமிழகம்

பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணையில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறந்துவிடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நூறு அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியாக 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ துணி துவைக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லி பாத யாத்திரையில் ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்

Lakshmanan

தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திப்பவர் மு.க.ஸ்டாலின் : முதல்வர் பழனிசாமி!

Saravana

கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்

EZHILARASAN D