தமிழ்நாட்டில் மே மாத இறுதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm வசதி மூலமும் பணப்பரிவர்த்தனை நடைபெறும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரத்தில் உள்ள 683 நியாய விலைக்கடைகளிலும் QR Code மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே வரும் 31 ஆம் தேதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm, UPI வசதி செய்து கொடுக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படியுங்கள் : இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரப்படும் கே-பாப் பிரபலங்கள்
இன்றைய உலகில் கையில் பணத்தை எடுத்துச் செல்ல பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு நலன் கருதி எடுத்துச் செல்வது இல்லை என்பதை காரணமாகக் கூறினாலும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் கிடைக்கும் வசதிகள் மக்களை பெரிதும் கவர்ந்ததே காரணம் எனலாம். கூட்டுறவுத்துறையின் இந்த அறிவிப்பு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை விரும்புவோர்க்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.







