நெல்லை பத்திநாதபுரம் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் 135ம் ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றம்!

நெல்லை, வடக்கன்குளம் அருகே உள்ள பத்திநாதபுரம் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் 135ம் ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லை வடக்கன்குளம் அருகே உள்ள  பத்திநாதபுரம் ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் 135ம் ஆண்டு திருவிழாவில் திருயாத்திரை…

நெல்லை, வடக்கன்குளம் அருகே உள்ள பத்திநாதபுரம் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் 135ம் ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

நெல்லை வடக்கன்குளம் அருகே உள்ள  பத்திநாதபுரம் ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் 135ம் ஆண்டு திருவிழாவில் திருயாத்திரை திருப்பலியும் மாலை ஜெபமாலை , மிக்கேல் அதிதூதர் சப்பரப்பவனியும் அதனைதொடர்ந்து கொடியை அருட்தந்தை கிறிஸ்டியன் அர்ச்சித்து ஏற்றி வைத்தார். அதன் பின் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. மேலும் இந்த கொடியேற்ற நிகழ்விற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோா் கலந்து கொண்டனர்.

இந்த திருவிழா நாட்களில் தினமும் திருயாத்திரை திருப்பலியும், மாலை மறையுறை, நற்கருணை ஆசீர், போன்ற நிகழ்ச்சிகள் வழிபாடுகள் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியாக வரும் ஜூலை 9ம் தேதி 8ம் நாள் திருவிழா அன்று இரவு புனித ஆசீர்வாதப்பர் ரத வீதிகளில் தேர் பவனியும், 10ம் தேதி 9ம் நாள் விழாவான திருயாத்திரை திருப்பலி, நற்கருணை பவனியும், அன்னையின் திருஉருவ தேர் பவனியும் நடைபெற உள்ளது.

அதனையடுத்து 11ம் தேதி 10 நாள் விழாவான திருயாத்திரை திருப்பலி, தேர் பவனி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.