ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நிறுவனங்கள் சார்பில் தொடர்பபட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டு காரணமாக 32 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதால் இந்த தடை சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இதனையடுத்து தமிழ்நாடு அரசின் தடை சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் கோரப்பட்டது. வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து, ஜூலை 13ம் தேதி வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







