முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் செய்திகள் சினிமா

கடும் எதிர்ப்புகளை மீறி 100 நாடுகளில் 2500 திரையரங்குகளில் வெளியான “பதான்” படம்

இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளை மீறி பாலிவுட் கிங் நடிகர் ஷாருக்கான் நடித்திருந்த பதான் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வந்துள்ள இப்படம் உலகம் முழுவதும் 100 நாடுகளில் 2500 திரையரங்குகளில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட, வெள்ளிவிழா படங்களாக அமைந்துள்ளன. ஆனால் சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதும் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றிகளை பெறவில்லை. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஷாருக்கான் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவராமல், அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்படியான ஒரு நிலையில் தற்போது யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் இன்று உலகம் முழுவது 100 100 நாடுகளில், 2500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதுவரை வேறு எந்த இந்திய படமும் இப்படி அதிகமான நாடுகளில், அதிகமான திரையரங்குகளில் வெளியாகவில்லை.

ஷாருக்கானின் பதான் படம்தான் முதன் முறையாக இப்படி அதிக நாடுகளில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளதாக திரைப்பட தொழில் நிபுணரான தரன் ஆதர்ஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் முதல் நாளிலேயே 4 லட்சம் டிக்கட்டுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை மாலை வரை 3.9 லட்சம் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்திருப்பதாக அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.

பல மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ளார். மேலும் சிறப்பு தோற்றத்தில் சல்மான் காணும் இப்படத்தில் நடித்துள்ளார்.

ஷாருக்கானின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பதான் படத்தின் வெளியீட்டை ஒட்டி , அவரது ரசிகர்கள் மும்பை முழுக்க தியேட்டர்களில் உயரமான மிகப்பெரிய பேனர்களை வைத்தனர் கொண்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் கூடவே , தனது வீட்டு பால்கனி வழியாக அவர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துகளை பெற்றார். இதனையடுத்து இப்படம் மும்பையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பாந்த்ரா கேலக்‌ஷி திரையரங்கில் முதல் காட்சி திரையிடப்பட்டது.

படைத்தை பார்த்த ஷாருக்கானின் ரசிகர்கள் அனைவரும் பதான் ஒரு சிறந்த ஆக்ஷன் திரில்லர் படமாக இருப்பதாகவும், ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் அப்ரஹாமின் நடிப்பு அபாரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக சல்மான் கானின் சிறப்புத்தோற்றம் படத்தின் ஹைலைட்டான விஷயமாக அமைந்துள்ளதாகவும், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைப்பதாகவும் இருப்பதாக திரைப்பட விமர்சனங்களும் வந்துள்ளன. படத்தில் அங்கங்கே சில குறைகள் இருந்தாலும், ஷாருக்கானின் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது .

இதற்கு முன்பாக பதான் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியானதில் இருந்தே அதில் வரும் காட்சிகள், தீபிகா படுகோனேவின் காவி நிற உடை ஆகியவை இந்து மதத்தை புண்படுத்துவதாக உள்ளதாக கூறி, இந்த படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும், வன்முறை நிகழ்வுகளைம் நடத்தின. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி திரைப்படங்களுக்கு எதிராக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்கவேண்டாம் என்று கட்சி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டதை அடுத்தது படத்திற்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்து, இன்று படம் 100 நாடுகளில், 2500 திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் ஷாருக்கானின் இப்படம் பாலிவுட் திரையுலகை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்ப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் ரஜினியின் புதிய லுக்!

Yuthi

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’

G SaravanaKumar

அனுமதியில்லாமல் யானைகளை பயன்படுத்தியதாக புகார்- வாரிசு பட குழுவுக்கு நோட்டீஸ்

Web Editor