உலகின் மிகப்பெரிய மசாலா ஓவியம்; கின்னஸ் சாதனை படைத்த சென்னையை சேர்ந்த பெண்

சென்னையை சேர்ந்த கலைஞர் உலகின் மிகப்பெரிய மசாலா ஓவியத்தை உருவாக்கியுள்ளார். சென்னையை சேர்ந்த  கலைஞர் ஒருவர் 908.39 சதுர அடியில் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி வண்ணத்துப்பூச்சி ஓவியத்தை வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.…

சென்னையை சேர்ந்த கலைஞர் உலகின் மிகப்பெரிய மசாலா ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.

சென்னையை சேர்ந்த  கலைஞர் ஒருவர் 908.39 சதுர அடியில் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி வண்ணத்துப்பூச்சி ஓவியத்தை வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சர்ரே மாவட்டத்தில் வசித்து வரும் ப்ரீத்தி விஜய், வண்ணத்துப்பூச்சி தனது ஓவியத்தில் மஞ்சள், மிளகு, கிராம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி உலகின் மிகப்பெரிய மசாலா ஓவியம் வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதை கின்னஸ் உலக சாதனை அமைப்பும் உறுதி செய்துள்ளது.

முன்னாள் மென்பொருள் பொறியாளரான ப்ரீத்தி விஜய், சுயமாக ஓவியம் கற்றுக்கொண்ட கலைஞராகி, தற்போது தனது படைப்புகளை சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்து வருகிறார்.

இயற்கைப் பொருட்களுடன் வேலை செய்வதில் ஆர்வம் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனக்கு திடீரென்று மஞ்சள், மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வைத்து வண்ணத்துப்பூச்சி ஓவியம் ஒன்றை வரைய யோசனை தோன்றியது என கூறினார்.

தனது சாதனை படைத்த மசாலா ஓவியத்திற்கான ராட்சத துணி இந்தியாவில் உள்ள தனது சொந்த ஊரான சென்னையிலிருந்து பெறப்பட்டது என்றும், தனது பெயிண்ட் 11 பவுண்டுகள் மசாலா கலவையிலிருந்து தயாரிக்கப்பட்டது என்றும் விஜய் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.