மெட் காலா 2023 : சிவப்பு கம்பள வரவேற்பிற்கு தயாராகும் ஆலியா பட்

மெட் காலா நிகழ்ச்சியில், இன்று ஆலியா பட்டின் உடை அலங்காரம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்துடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பேஷன் உலகில் ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை, திரை நட்சத்திரங்கள் முதல் மாடல் அழகிகள்…

மெட் காலா நிகழ்ச்சியில், இன்று ஆலியா பட்டின் உடை அலங்காரம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்துடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பேஷன் உலகில் ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை, திரை நட்சத்திரங்கள் முதல் மாடல் அழகிகள் வரை உலகளவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நிகழ்வு என்றால் அது மெட் காலா நிகழ்ச்சிதான். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் மே முதல் திங்களன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலகப் புகழ் பெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள், மாடல்கள், இசைப் பிரபலங்கள் என பல நபர்கள் வித்தியாசமான உடையுடன் வந்து சிவப்பு கம்பள வரவேற்பை பெருவர். அந்த வகையில், 2023 ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.

இந்த முறையும் உலக அளவில் பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிவப்பு கம்பள வரவேற்பு பெற உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு இந்த அற்புதான வாய்ப்பு கிடைத்துள்ளது. பொதுவாகவே, எந்தொரு நிகழ்ச்சிக்கு ஆலியா பட் சென்றாலும் வித்தியாச வித்யாசமான உடை அணிந்து பலரையும் கவரும் இவர், இந்தமுறை ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பேஷன் நிகழ்ச்சிக்கே சென்றிருப்பதால், சிவப்பு கம்பள வரவேற்பின் போது என்ன உடையுடன் அவர் வரப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது நியூயார்க் நகரம் சென்றுள்ள ஆலியா பட், அங்கு தரை இறங்கியது முதலே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புதிய புதிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். குறிப்பாகம், கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து அவரது வளர்ப்பு
பூனையான எட்வர்டுடான் அலியா பட் போஸ் கொடுத்து வெளிவந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தைப் அவர் பகிர்ந்து கொண்ட போது , “துணைக்குத் தயாராகிறது…” என்ற வாசகத்தையும் அவர் எழுதி இருந்ததால் சிவப்பு கம்பள வரவேற்பில் தன் பூனையுடன் தான் அலியா பட் வரப்போகிறார் என்ற முடிவுக்கு பலரும் வந்துள்ளனர்.

ஏற்கனவே இந்த பிரம்மாண்ட பேஷன் நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி உட்பட பலர் பங்கேற்று அசத்தல் உடைகளுடன் தோன்றி பலரையும் கவர்ந்திருந்த இருந்த நிலையில், இன்று அலியா பட்டின் உடை அலங்காரம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்துடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.