விஜய்யின் #TVK மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்?

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான்…

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என தெரிவித்த விஜய், எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் இக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கொடி பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்னும் சற்று நேரத்தில் கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வர இருக்கிறார். தற்போது பறை ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு மொழிக் கொள்கையை பின்பற்றி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வு, மின் கட்டணம், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மகளிர் பாதுகாப்பு, தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம், மகளிர் – குழந்தைகள் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.