தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் தொடங்கியது தவெக முதல் மாநாடு!

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என தெரிவித்த…

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என தெரிவித்த விஜய், எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் இக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கொடி பாடலுடன் தொடங்கியது.

லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் மாநாடு தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு விஜய் வரவுள்ளதால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மாநாடு வெற்றிப் பெற பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர். மாநாடு தொடங்கிய போதும் தொண்டர்கள் வருகை அதிமகாவே இருக்கிறது. இதனால் வி.சாலை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.