செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைது

தூத்துக்குடியில் செல்போன் டவர் பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசல புறத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு…

தூத்துக்குடியில் செல்போன் டவர் பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசல புறத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்தது.

அந்த கோபுரத்தை கண்காணிக்க காவலர் ஜாகிர் உசேன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இரண்டு தினங்களுக்கு மர்ம நபர்கள் கோபுரத்தின் மேலேறி அதன் பாகங்களை கழட்டி கொண்டிருப்பதாக நிலத்தின் உரிமையாளர் மகன் ஜெயராம் என்பவருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

உடனடியாக காவலரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர் ஜாகிர் ஹுசைன் செல்போன் கோபுரத்தில் மர்ம நபர்கள் ஏறி பாகங்களை கழட்டி சரக்கு வாகனங்களில் ஏற்றி கொண்டிருப்பதை கண்டார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து சரக்கு வாகனத்தில் ஏறி தப்பியோடினர். அப்போது சிந்தலக்கரை அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் சிக்கியது.

இதனையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த சசிகுமார், சின்ன துரை, மணிகண்டன், சங்கரீஸ்வரன் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொள்கையில் கழுகாசலபுரம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தின் பாகங்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிய 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், சரக்கு வாகனம் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.